அன்பே வா அன்பை தா
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பே
ஆரமுதே
அன்பில் மனம் பரிதவளே
கண்ணே
என் கண்மணியே
கண்களும் உன்னை தேடுதே
காலங்கள்
சென்றாலும் நீ
என்னை பிரியாதே
காயங்கள்
தந்துவிட்டு
என்னை மறந்து போகாதே
மறுபிறவி
எடுத்தேனும்
உனை வந்து சேர்வேன்
பெண்ணே
பல நாட்கள்
தவம் இருப்பேன்
உந்தன் அன்பு கிடைத்திடவே
பெண்ணே
அன்பே வா
நீ - அன்பை தந்தாயே
இரு
கண்கள் உன்னை தேடி
உலகம்
முழுவதும் அலைகிறதே
மறந்தும்
மனம் உந்தன் நினைவை
மறக்காமல் தான் இருக்கிறதே
பிரியேன் என
சொல்லிவிட்டு
பிரிவை தந்து போகின்றாய்
மறவேன் என
சொல்லிவிட்டு
மறக்கவும் முயன்றாயோ
வருவேன் என
சொல்லிவிட்டு
வருவதை நிறுத்தி கொண்டாயோ
தருவேன் என
சொன்னை அன்பை
தருவதையும் நிறுத்திவிட்டாய்
உன்னாலே
எந்தன் வாழ்வு
ஸ்தம்பித்து போனதடி
தன்னாலே
உந்தன் வரவால்
உலகம் சுற்றுதடி
அன்பே வா
கொஞ்சம் நீயும்
நான்
வாழ்வது உன்னால்
தானடி
என் கண்மணி