கரைந்து போகின்றன தோழி....!!!
![](https://eluthu.com/images/loading.gif)
நாம் இருவரும்
நெருங்கி அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கும்
மாலை பொழுதின்
கடற்க்கரை மணலில்
நம்மை கடந்து போகும்
சந்தேக பார்வைகள் பல
நம் இருவருக்குமான
சின்னஞ்சிறு
இடைவெளியில்
நுழைய முயன்று
வந்து விழுந்து
உடைந்து
நொறுங்கி
பின் பொசுங்கி
சாம்பல்களாகி ஈரக்காற்றோடு
கரைந்து போகின்றன தோழி
சற்றே அமைதியுடன்
அவர்களை நீ மீண்டும் பார்க்கும்
உன் கண்ணியமான பார்வைகளால்.....!!!