ஆறாம் விரல் !

ஆறாம் விரல் !

நம் மக்களிடையே உள்ள பொதுவான கருத்து -
ஆறாம் விரல் உள்ளவர்கள் இந்திரலோக தேவதைகளின்
ஆசி பெற்றவர்கள் என்று !

என் நட்பு மற்றும் உறவு வட்டாரங்களில்
ஆறாம் விரலோடு உள்ளனர் சிலர் - ஆசியுண்டோ
என்றால் பதில் உண்டோ ?

நம் மனது அற்பமானது என்பது உலகறிந்தது -
ஆறாம் விரலுள்ள திரை நட்சத்திரங்கள் போதும்
அதை திரையிட்டு காண்பிற்க !

என் நாட்களும் அற்பமாய் தேய லானது
ஆறாம் விரலின் அனுகிரகம் பெறவன்று - பூலோக
ரம்பையின் கவனம் ஈர்க்கவோ ?

நம் இவன் தேடியது கிடைத்ததொரு நாள் -
ஆறாம் விரல் மட்டுமல்ல மேலோக தேவதைகளின்
அருள் கூட எனலாம் !

என் பூலோக ரம்பையின் கவனமும் கிட்டியது
ஆறாம் விரல் செய்த மாயம் - அவளதை
வேண்டாமென்று கோபித்தல் நியாயமோ ?

அவள் வேண்டாம் என்றாள் ! ஆச்சர்யமில்லை !
இவனது பூலோக ரம்பையின் நாயகனை
அந்த மேலோக ராணிகள் விரைவில்
ஆட்கொள்வார்கள் என்ற அச்சமாம் !

ஆம் !

ஆறாம் விரல் கிடைத்ததெங்கு தெரியுமோ ?
அலுவலகம் அருகிலுள்ள பெட்டிக் கடையில் !
நியாயமன்றோ அவள் கோபமானது ? வாழாதன்றோ
சிலநொடிக்கு மேல் அவ்விரல்?

நிறுத்தம் !!

எழுதியவர் : விவேகானந்தன் (30-Mar-12, 3:33 pm)
பார்வை : 313

மேலே