நட்பு - பழக்கம்

நட்பு - பழக்கம்
பார்த்து செய்யவேண்டிய
மிக சிறந்த ஒழுக்கம் ,

கண்டவனோடெல்லாம்
பழக கூடாது
பாவி பயல்களோடு
நட்பு கொள்ள கூடாது ,

நாயோடு பழகினால்
குரைத்து கடி படுவோம்
பேயோடு பழகினால்
சுடுகாடு அலைவோம் ,

சேர்த்து வைப்பவனோடு
சேர்ந்திருக்கலாம்
பிரிந்து விட சொல்கிறவன்
ஒரு நாள் ஓடி போவான்,

வெடுக்கென கோபிக்கிறவனும்
தாழ்வு பார்வை பார்ப்பவனும்
ஐயோ கடவுளே என்பவனும்
யோசிக்காமல் பேசுபவனும்
பேசாமலே இருப்பவனும்
சட்டென உறவை அறுப்பவனும்
பழக தகுதியற்ற - பதர் ,

நல்ல நண்பன்
நல்லதை செய்வான்
நட்பு போர்வையில்
நாகம் வந்தால்
கொட்டியே தீரும்,

வயது ஒத்த நட்பு
வசந்தம் தரும் - ஆனால்
குரு சிஷ்ய நட்பு நல்
வாழ்வு தரும் ,

உண்மை சொல்லி
உன்னை தண்டிப்பவன்
நண்பன்
பொய் சொல்லி
உன்னை காப்பவன் - போலி
சிரித்து பேசுபவன்
சீரழித்து விடுவான்
சிந்திக்கும்படி பேசுபவன்
சிறந்த நண்பன் ,

நாடகமாடும்
நயவஞ்சக நண்பனை விட
எதித்து நிற்க்கும் எதிரி
எத்தனையோ மேல்

நல்ல நட்பு பிரியாது
பிரிந்தாலும் இறக்காது
நட்பு இறப்பது
உலகம் எரிவதற்க்கு சமம் ,

போதைக்கும்
புகைக்குமாய்
வரும் நட்பு புதைந்து போகும்
உன்னை புரிந்துகொண்ட
புனித நட்பு
புதைகுழி வரை வரும் .

எழுதியவர் : பந்தளம் ( ரமேஷ்பாபு ) (30-Mar-12, 5:41 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 530

மேலே