காதலியால் வந்த வினை
எனக்குள் இருந்த கவிஞனை
உணர்த்தியது
என் காதல்!
காதல் வெற்றியை
கொண்டாட எனக்கு
கொடுத்து வைக்கவில்லை!
ஆனால்
காதல் தோல்வியால்
நான் எழுதிய
கவிதைகளை
கொண்டாட இங்கு
பல பேர் உண்டு.
பலருடைய
வாழ்க்கையின் முடிவு
காதல் தோல்வி.
ஆனால் எனக்கு முடிவே
ஆரம்பமானது.
ஆம்! உண்மைதான்.
முற்றுப்புள்ளியே
என் வாழ்க்கையின்
முதற்ப்புள்ளியானது!
காதலில்
ஜெயித்தவன்
காதலை மட்டுமே
வெல்கிறான்!
ஆனால்
காதலில் தோற்றவனால்
மட்டுமே
இந்த உலத்தை
வெல்ல முடியும்.
வென்று
கொண்டிருக்கிறேன்!
என்னை பற்றி நான்
இங்கே கூற வரவில்லை.
என் எழுத்தை பார்த்து
நீங்கள்
கூறுங்கள்.