"பிச்சைக்காரன்"
![](https://eluthu.com/images/loading.gif)
நடை பதை வீட்டுக்காரன்
நாய்களுக்கு போட்டியாளன்
எச்சிலை சொந்தகாரன்
கந்தை துணி படுக்கைகாரன்
வள்ளுவன் சொன்ன செல்வந்தன்
வயிற்று பசியால் பிச்சைக்காரன்;
வயிற்று பசிக்கு வாங்கிதின்ன
வற்றி போன உடம்போடு
தட்டேந்தி வருபவன்
அனுதினமும் அயராது
"அம்மா.. தாயே..." யென
மொழி வளர்ப்பவன்
செல்லும் செல்வம் கொடுத்து
செல்லாத செல்வம் சேர்க்கும்
விந்தை கந்தை வேந்தன்;
கூலி இல்ல
கோயில் காவல்காரன்;
மழலை வரம் கேட்டு
கோயில் படி ஏறியவளுக்கு
கூக்குரலில் வந்த அவன்
"அம்மா" கேட்டு
அடிவயிற்றில் அரைநிமிட
ஆனந்த குளிர்சி;
பெற்ற பிள்ளை எட்டி உதைத்து
விட்டு போனபின்
வற்றி போன நெஞ்சில்
வாசல் வழி
"அம்மா... தாயே.."வில்
பால் சுரப்பெடுக்க வைக்கும்
ஆனந்தத்தின் கடவுள்;
ஐந்து வயது குழந்தையை
அவன் சொல்லும் "அம்மா"வால்
பிள்ளை பெற்ற பெரியவளாக
ஒரு நொடியில் உருவாக்கும்
வினோத குயவன் ;
இவன் தட்டு சமத்துவ பாத்திரம்
எல்லா சதிகாரன் பணத்திற்கும்
ஒரு மதிப்புதான் இதில்
"நல்லா இருக்கணும் சாமி"
இவன் போன்று புதுமை செல்வந்தனை
இந்த உலகத்தில் படைத்த
உன்னை கற்சிலையாக இருந்தாலும்.
உன்னை கையெடுத்து
கும்பிடுகிறேன்........
" ஆத்தா.... தாயே........"