ஈர்ப்புவிசை

பனித்துளிகள் துயிலும்
புல்தரைகள்
தேயிலை தளிர்களை
தழுவிவரும் தென்றல்
இதமான குளிர்
முண்டாசு கட்டிய
மலை முகப்புகள்
விடியலுக்கு வாழ்த்துப்பாடும்
வண்டுகளின் ரிங்காரங்கள்
எனக்கு முன் ஒரு பாதை
முடிவே இல்லாத பாதை
போதைஊட்டும் பாதை
யாரும் இல்லை
நான் மட்டும் தனியாக
தன்னந்தனியாக
ஆனாலும்
பாதங்கள் படியவில்லை
கால்கள் தள்ளாடுது
பயணம் தொடரவில்லை
மூனாறு மலையழகே!
மன்னித்துவிடு,
உன்னிடம்
தினம்தோறும் நான் நடக்கும்
முட்டிமோதி தள்ளும்
தெருவீதியின்
நெரிசல் இல்லை
கடை வீதியின்
இரைச்சல் இல்லை
உன் ஈர்ப்புவிசை
என்னை ஈர்க்கவில்லை

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (5-Apr-12, 1:20 pm)
பார்வை : 183

மேலே