இது என்னை போல் தமிழ் வழி கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவனுக்கும் சமர்ப்பணம்........!!!

முயற்சி செய்கிறேன்- முடியும் என்பதால்!

ஒரு வாய்ப்பை எதிர் பார்கிறேன்;
அதை என் எதிர்காலம் என்கிறேன்!

எத்தனையோ துன்பங்களையும்-
அவமானங்களையும்-
அதற்கான படி கட்டுகளாய் மாற்றுகிறேன்!

ஓவொரு படிகளாய் ஏறும் போதும்
எட்டி உதைகின்றனர்- என் நண்பன் எனும் எதிரிகள்

அனால் -

அவர்கள் எட்டி உதைத்து என்னை தான்;
என் எண்ணங்களை அல்ல!

வண்ணங்கள் கொண்ட வாழ்க்கைக்காக-
வருகிறேன் மீண்டும் வருகிறேன்!

வெற்றியின் வாசலை தேடி வருகிறேன்!

வெற்றியின் நெற்றியில் திலகமிட்டு-
திருமணம் செய்து கொள்ள வருகிறேன்!

வெற்றியே உன் கரம் பிடித்து வலம் வருவேன்!

என்னை வீழ்த்தியவர்கள் முன்பு-
வீர நடை போட்டு வலம் வருவேன்!
வருவேன்-
நிச்சியம் வருவேன்!

வாழ்கையின் நிசப்த அலை வரிசையில்-
நீங்காத இசை தாளம் போட வருவேன்!

தமிழ் வழி கல்வி பயின்றதால்
தாழ்வாக நினைத்தீர்...
உங்கள் தலை உயர்ந்து பார்க்கும் தூரத்தில் என் வாழ்க்கை மாறும்!!

ஏன் என்றால் நான் தாய் மொழியில் பாடம் கற்றவன்-
என் தாயும்-
எந்த தாயும்-
தன் மகனிற்காக பிரார்த்தனை செய்வாள்;
என் இரு அன்னையின் பிரார்த்தனை- என்னை இரு மடங்கு பலம் உள்ளவனாக மாற்றும்..!


இது என்னை போல் தமிழ் வழி கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவனுக்கும் சமர்ப்பணம்........!!!

எழுதியவர் : ansari (6-Apr-12, 9:33 pm)
பார்வை : 209

மேலே