பொற்(போர்)காலம்
எனக்குள் எத்தனை கருப்பு நட்சத்திரங்கள்..
எனக்குள் சத்தமிடும் உனது மவுனம்...
எனக்குள் முத்தமிடும் உனது மூச்சுக்காற்று..
பூக்களும் சுவாசிப்பதை உன்னால் உணர்கிறேன்..
என்னால்
தரையினில் துள்ளவும் முடியவில்லை
அறையினில் தூங்கவும் முடியவில்லை
பட்டாம்பூச்சிகளுக்கு நடக்க கற்றுத்தரவேண்டும்-உன்
பாதங்களை சுமப்பதற்க்காக
வானவில்லை வட்டமாக்க வேண்டும்-உன்
விரல்கலுக்கு மோதிரமாக்க..
பனித்துளியெல்லாம் கோர்க்க வேண்டும்-உன்
வாசலில் தோரணமாக்க..
இன்னும் எத்தனை எத்தனையோ...
கொஞ்சம் புன்னகை.. நிறைய அழுகை..
கொஞ்சம் அதிர்ச்சி.. நிறைய தயக்கம்..
கொஞ்சம் தைரியம்.. நிறைய படபடப்பு..
போர்க்கள உணர்வுகள் தான் எனக்குள்..
இந்த பாலைவனமும்
இளவேனிற்காலமாகும்..
இந்த பயங்கரவாத பத்துமாதம் முடிகிறவரை..
வெற்றிடமான முகவரியும்
முழுமையடையப் போகிறது...
முந்நூறு நாட்கள் முடிந்ததும்..
தாய் என்னும் முகவரிக்காக
முழுகாமல் காத்திருக்கிறேன் !!!!