கல்லூரி பிரிவு உபசார நாள் (farewell day ) பாடல்

ராகம்: (துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் வரும்
"இன்னிசை பாடிவரும்" என்ற பாடல்)

ஷிப் ஒன்று மூழ்கி விட்டால்
கடலும் கரைவதில்லை -நம்
பிரண்ட்ஷிப் மூழ்கி விட்டால்
இந்த மூச்சிக்கு இடமில்லை
நம் உதடு சிரிக்குது
ஆனால் உள்ளம் அழுகுது
உயிரும் கரையுது துள்ளும் கண்கள் கலங்குது
இந்த வாழ்க்கையே ஒரு பிரிவுதான்
அது இன்று நிஜமாகிறது .............
(ஷிப் ஒன்று)

இதயம் ஒன்று இல்லாமல் சுவாசங்கள் கிடையாது
சுவாசங்கள் நின்றாலோ உயிர் வாழ முடியாது
நண்பர்கள் போதுமே எங்கள் உயிர்கள் வாழுமே
நட்பொன்று போதுமே எங்கள் எதிர்கள் வீழுமே
எங்கள் நட்பு எதுவரை
ஏழாம் ஜென்மத்தில் எரியும் வரை
எரிந்த நட்பும் உயிர்த்தெழுந்தால்
மறுமையில் சுவர்க்கத்தில் நாம்தலுவோம்
அட பாடல் போல வாடல் கூட ஒரு சுகமே ...................
(ஷிப் ஒன்று)

தாய் ஒருவள் இல்லாமல்
சேய் இங்கு கிடையாது -இன்று
தாய் எங்கோ சேய் எங்கோ
தனியாக போறது .........
இதனால் கண்கள் நீரை இழக்கிறது
ஆனால் குருதி வடிகிறது
குருதியும் ஏனோ ருசிக்கிறது
நண்பர்கள் விழிகளில் வசிப்பதினால்
அட பாடல் போல வாடல் கூட ஒரு சுகமே ...........
(ஷிப் ஒன்று)

தப்ரேஜ்

எழுதியவர் : தபரேஜ் (9-Apr-12, 11:06 am)
பார்வை : 1038

மேலே