சாவுகள் பலவிதம்

வெட்டிக்கொண்டால்
வலிக்கும் சாவு
விஷம் குடித்தால்
துடிக்கும் சாவு
தொங்கினால்
நாக்குத்தள்ளி சாவு
இவை தற்கொலைச்சாவுகள்.
இவை உடனடிச்சாவுகள்.

ஆனால்

புகைபிடிப்பவர்கள்
மரணத்தை தள்ளிப்போடும்
மகத்துவம் தெரிந்தவர்கள்.

புகைத்ததும் இறந்துபோவோம்
என்று தெரிந்தால்
புகைப்பவர்கள் எத்தனைபேர்?.

தற்கொலைச்சாவுகள் பலவிதம்-அதில்
புகைபிடித்து சாவதும் ஒருவிதம்

(தினம் இருபது புகைப்பான்கள் புகைத்தால் இருபது வருடம்தான் வாழ்வு என்பது ஆய்வு அறிவிக்கை)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (9-Apr-12, 1:44 pm)
பார்வை : 243

மேலே