எச்சமிடும் காக்கைகளே!

சான்றோர் வரிசையில்
சிலையாக நிற்கும்
எம் மாமனிதர்கள் தலையில்
எச்சமிடும் காக்கைகளே!

எச்சத்தில் ஏதும் மிச்சமிருந்தால்
இங்கே வாருங்கள்
இவர்கள் தலையில்
எச்சமிடுங்கள்! எச்சமிடுங்கள்!

பான்-பராக் மென்று
பொது இடங்களில்
பண்பாடு விடுத்து
உமிழ்வோர் தலைகளில்...

சந்து பொந்து சுவர்களில்
சிறுநீர் கழித்து
சுகாதாரத்தை
சீர் குழைப்போர் தலைகள்....

பஸ்சில் பயணிக்கும்
பாவைரை உரசி
பல்லைக்காட்டி
பாவனைசெய்வோர் தலைகள்...

பொதுவிடத்தில் நின்று
புகைப்பவர் தலைகள்...
வாகனத்திலிருந்து
எச்சில் உமிழ்பவர் தலைகள்....

இதுபோன்ற விழங்காத தலைகள்
இன்னும் நிறைய இருக்கு.

எச்சமிடும் காக்கைகளே
எங்கே இருக்கின்றீர்கள்?

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (9-Apr-12, 3:18 pm)
பார்வை : 371

மேலே