என்ன சொல்ல போகிறாயடி?

உன்னிடம் இது வரை பேசியது இல்லை
என் உதடைவிட என் பேனா
உன்னிடம் அதிகம் பேசியிருக்கும்
உன்னிடம் கொடுத்தவை
வெறும் காகித கவிதைகள் அல்ல
என் மூச்சும் என் இதய துடிப்பும்
கலந்த வாடாத காகிதம் அது
பெண்ணே உன் நினைவு
என் வானம் போல்
சூழ்ந்த மேகம் போல்
உடல் நனைக்கும் மழை போல்
சுட்டெரிக்கும் வெயில் போல்
சுடாத நிலவு போல்
சூரியகாந்தி மலர் போல்
தீராத வலியாகவும்
மாறாத வடுவாகவும்
மறுக்க முடியாத நிழலாகவும்
மறக்க முடியாத நினைவாகவும்
நிறைந்துவிட்டதடி,,,,,,,,,
நிஜம் என்ன சொல்வாயா
இல்லை என்னை கண்டும்
நிற்காமல் செல்வாயோ ?
என்ன சொல்ல போகிறாய்
என்னை கொல்ல போகிறாய் ?

எழுதியவர் : AKNI (10-Apr-12, 9:38 pm)
சேர்த்தது : AKNI
பார்வை : 198

மேலே