எழுத்து.காம்

தமிழ் மீது கொண்டுள்ள காதல் தான் எழுத்து
தமிழ் கூறும் நல்லுலகம் தான் எழுத்து
உயிரையும் மெய்யையும் இணைக்கும் எழுத்து
மொழியையும் உணர்வையும் இணைக்கும் எழுத்து
வல்லினமும் இடையினமும் சேர்க்கும் எழுத்து
பாமரனையும் புலவனையும் சேர்க்கும் எழுத்து
தமிழ் அறிவை வளர்க்கும் ஆசான் எழுத்து
தமிழ் தொண்டு செய்யும் அடிமை எழுத்து
தமிழ் வாழும் தளம் தான் எழுத்து
தமிழன் மகிழும் அறிவுத்தளம் தான் எழுத்து

என்னை போன்ற பல தமிழ் ஆர்வம் கொண்ட அன்பர்களுக்கு இந்த அருமையான இணையதளத்தை அமைத்து கொடுத்த எழுத்து.காம்ற்கு தமிழ் கூறும் நல்லுலகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (11-Apr-12, 12:40 pm)
பார்வை : 332

மேலே