தோளில் சாய்ந்து
![](https://eluthu.com/images/loading.gif)
வழக்கம் போல் சாதரணமாக தான் .....
தொடங்கியது...அந்த பேருந்து பயணம்....!
வழக்கம் போல் சாதரணமாக தான்
இருந்தது ... அந்த பேருந்து பயணம்...!
மெதுவாய் வேகமெடுக்க தொடங்கிய போது....
கொஞ்சமாய் பேச தொடங்கினாய்....
ஏதேதோ பேசிக்கொண்டு...என் தோளில் சாய்ந்தபடி....
உன்னை அறியாமல் ...மெதுவாக தூங்கி போனாய்....
மிக அழகாக தூங்கும்....
உன்னுடைய அந்த அமைதியான அழகில்....
நான் முழுவதுமாக கரைந்து ......
உன் நெற்றியில் பாசமாய் பதிக்கிறேன் ஒரு முத்தம்...!
ஆழமான அந்த முத்தத்தில்...
அதன் கதகதப்பில்.....
உன் தூக்கத்திற்கு இடையிலும்...
உனக்கே தெரியாமல் ....
சிரிக்கிறாய் நீ....அழகாய்....
இன்னும் அழகாய்...!