விதை
அனைத்தும் மண்ணில்
புதைக்கப்பட்டபோது - நீ
மட்டும் விதைத்துகொண்டாய்
மண்ணுக்குள் நிகழ்வது மரணம்
என்பதை மாற்றி
மண்ணுக்கும் ஈரம் உண்டு - அங்கே
வாழ்வுக்கு மீண்டும் வழியுண்டு
என்ற புதிய நம்பிக்கை விதைத்திட்டாய்
மண்ணோடு போராடி மடிந்து மீண்டும்
விண்ணை காண விருச்கமாய் எழுந்திட்டாய்
தன்னை இழக்கும் வரை
தன்னலம் துறக்கும் வரை - தரணியில்
மறுவாழ்வுண்டு என்றே மெய்பித்தாய்