முயற்சி

முயற்சி என்னுள் - நீ
வாழும் கடவுள்
புதியதை படைத்தெடுக்க
என்னை இயக்கிடும் படைப்பாற்றல்
என் இலக்கினை வென்றெடுக்க
பொங்கிடும் நம்பிக்கை புனல்
இயலும் முயன்றிடு வென்றிடு
என்பதே நீ தந்திட்ட சுவாசம்
வேதனை சோதனைகளை ஏற்று
சாதனை சரித்திரங்கள் - நான்
படைப்பது என்றும் உன் ஆற்றல்
நீ வேண்டும் எனக்கு என்றும்
என்னுள் இயங்கிடும் மூச்சாய்

எழுதியவர் : ஆ. தைனிஸ் (16-Apr-12, 1:27 am)
சேர்த்தது : athainiscap
Tanglish : muyarchi
பார்வை : 416

மேலே