அன்பளிப்பு
கண் சிமிட்டும் நொடிகளில் துவங்கிய.....
நம் நட்பின் தருணங்கள்..........!
நிமிடங்களாய் கரையும்.......
குறுஞ்செய்தி உரையாடல்கள் ஆயின......!
நம் உரையாடல்கள்....
மணிகளில் மூழ்கும் நினைவுகளாய்
நெஞ்சில் மிதக்கின்றன....!
அதனால் தான் என்னவோ....
நம் நட்பின் எல்லா நேரங்களையும்...
காட்டி கொண்டே இருக்கும்....
கைகடிகாரமாய்.....
என் கைகளை வளைக்கிறாய்...... !