அப்பா

அப்பா என்னைப் பார்த்த
பின் எனக்கான தேடலை!
ஆரம்பித்து உமக்கான தேவைகளை!
மறைத்து நமக்காக உழைக்கும்!
அப்பா!

கேக்காமல் கொடுக்கும் அன்பும்!
சொல்லாமலே புரிந்து கொள்ளும்!
புரிந்துணர்வும் நாம் சேட்டை சையும்!
போது மார்பில் எடுத்து அணைக்கும்!
அப்பா!

முன்னால் சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்கேட்டிருக்கிறேன்!
என்னைப்பற்றி பெருமையாக
பேசிக்கொண்டிருந்ததை
அப்பா

நினைப்பீர்களோ? அப்பா நான் உங்கள் மீது!
அன்பை வெளிக்காட்டவில்லை! என்று
இல்லை எப்படி எமக்காக உங்களின் ஆசைகளை
புதைத்தீர்களோ! அதுபோல் தான் நமக்காக
என் ஆசைகளையும்! புதைத்துக்
கொண்டேன்! எனக்குள்ளே! ! அப்பா!

எழுதியவர் : வி பிரதீபன் (19-Apr-12, 9:17 am)
Tanglish : appa
பார்வை : 301

மேலே