பசியும் பட்டினியும் பரிதவிக்கும் ஏழ்மையும்...

பகல்,இரவு பாராமல்
பல வேலை பட்டினி இருந்து
பிறர் பசியற ,
அவன் பசி மறந்து
உழைத்தாலும்,
அவன் பசிக்கு உணவில்லை...
அவன் பசிக்கே வழி இல்லாத பொது
பாவம் அவனின்
அந்த பச்சிளம் குழந்தைக்கு
என்ன தெரியும்...
பந்தியில் பரிமாறிய பலவகை உணவுகளை
பசியாற உண்ட பிறகு
மீதி பருக்கையுடன்,
இலையை பாதையிலே விட்டெறிந்தார்
அந்த மாடி வீட்டு மாமா...
பசி போக்க பாவம்
அந்த பச்சிளம் குழந்தை
பட்டென்று பறந்துபோய்
சுருண்டு விழுந்த இலை எடுத்து
திறந்து பார்த்த நேரம்
இலையில் மிஞ்சியிருந்த பருக்கைகளை
அந்த பச்சிளம் விரல்கள்
எடுத்து தின்னும்
அந்த அவல நிலை இன்னும் என் கண்முன்னே...
காண முகம் சுளித்தாலும்
பவம் கண்டு விட்டால் அவள் அன்னை
மகனே...!
என்று கட்டியணைத்து
நம் கவலை தீர வழியில்லைய
என்று கதறி அழுத நேரம்
என் கண்ணிர் விழுந்து
கல்தரையும் கடலானது...

எழுதியவர் : sarathysaru (26-Apr-12, 11:24 pm)
பார்வை : 230

மேலே