என்று வரும் மாற்றங்கள்...?!

இன்று நாம்..
எத்தனையோ உயரத்திருக்கு
பறக்க நினைக்கிறோம்...
பெயருக்கு பின்னால் எத்தனை பட்டங்கள் நமக்கு...?!
பணத்தாலும் பதவியாலும்
உயர்ந்து நிற்கிறோம்..
நம்மால் முடிந்த உதவிகளையும்
நாம் வாங்கிகொண்ட உதவிகளையும்
மறந்துபோகிறோம்..
கல்லூரிக்கு போயும்
கல்விகள் பல கற்றும்...கல்லாய் தான்
இருக்கிறோம் மனதளவில்...!
என்று நாம் மாற போகிறோம்
முடியாதவனுக்கு
மூங்கில் துணையாய்,
படிக்காதவனுக்கு பார்வை முறையாய்..????!

எழுதியவர் : ஷீபா.மு (27-Apr-12, 10:24 am)
பார்வை : 222

மேலே