அம்மா.....

அம்மா....
அசாதாரண அர்த்தங்களைகொண்ட
சாதாரண வார்த்தை....
ஆயிரம் அணுக்களில்
எனக்குமட்டும் அடைக்கலம்தந்த
அற்புதம் அவள்.....
கருவாய் இருந்த என்னை
உருவாய் ஆக்கிட
பத்து பிறைகண்ட
பௌர்ணமி அவள்....
என் புன்னகையைக்கான
எத்தனையோ புன்னகையை இழந்தவள்....
என் கண்ணீரை பார்த்து
எனக்குமுன் கண்ணீர் வடித்தவள்....
காலமாற்றத்தால் எனக்கு வயதனாலும்
இன்னும் என்னை குழந்தையாகவே பார்க்கும் அவளுக்கு
கடவுளும் நிகரில்லை....

எழுதியவர் : சரவணன். கி (27-Apr-12, 11:13 am)
Tanglish : amma
பார்வை : 260

மேலே