கைவிரல் ரேகையில் கரைந்தது காதல்

என் மனவெளியின்
நெடிய புதைகுழியில்
பாறையின் நிலையென
உருகிய நான்
இன்று
வெளியில் வருகிறேன்.

ஆத்மாவுக்கும்
குருதி அனுக்களுக்குமான
இடைவெளியில்
நகர்கிறது வாழ்க்கை.

காதல் கோப்பையில்
தேநீராய் வழிந்தவள்
தேல்விடம் சொட்டிச்சென்றாள்.

அந்த மாமரத்து
வேருக்கும்
ஆலமர நிழலுக்கும்
பேருந்து நிறுத்த
இருக்கைக்கும்
நிச்சயம் தெரியும்
நம் இருவருக்குமான
நெருக்கம்.

மலர் வசந்தம்
சுமந்த நெஞ்சில்
மலை சுமக்கும்
நிலை எனக்கு
வந்ததுவும் ஏனடியோ?

சில் வண்டுகள்
மொய்க்கும்
சில நூறு நிமிடங்கள்
பூத்த உதியமர
குடையின்கீழ்
நீ என்
மடியில் மலர்ந்த
கணங்களை மறந்ததும் ஏனடியோ?

பிரபஞ்சத்தின் சோகமாய்
பதிவாளர் அலுவலகத்தில்
என் கைரேகையை
பதிவுசெய்து
வேறொரு வாசலுக்கு
நானே
உன்னை அனுப்பிவைத்து
கண்ணீரோடு நின்ற
அந்த நாள்
கைவிரல் ரேகையோடு
கரைந்ததடி என் காதல்.

எழுதியவர் : vimal (30-Apr-12, 10:15 am)
பார்வை : 375

மேலே