நண்பர் திரு.ரெளத்திரனுக்கு என்ன ஆச்சு?

எழுத்துலக தோழர் தோழியர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

இப்பொது சில விசயங்களை கண்டிப்பாக பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இதன் விளைவுகள் எதுவாயினும் முழுக்க முழுக்க நானே பொறுப்பு.

ரெளத்திரனின் அரசியல் பீடம் அதிரட்டும் - 1 என்ற அவரின் கட்டுரைக்கு நான் எழுதிய விமர்சனக் கட்டுரை நண்பர் திரு.ரெளத்திரனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இதை வாசித்த சகோதரி லலிதா விஜயகுமார், ப்ரியாராம் மற்றும் தோழர் நிலா சூரியன் போன்றோர் அதன் பொருளை சரியாக உணர்ந்து கொண்டு கருத்து தெரிவித்திருந்தனர். நண்பர் திரு.ஈஸ்வர் போன்ற இன்னும் சிலர் தனிப்பட்ட விடுகை மூலம் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர். மிக்க மகிழ்ச்சி.

எனது எழுத்தில் சிறு தடுமாற்றம் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் நான் எழுத்திற்க்கு புதியவன். மெத்த படித்தவனும் இல்லை. ஆனால் சிந்தனைக்கு புதியவன் அன்று. சொல்லையும் செயலையும் நேர்கோட்டில் வைத்திருப்பவன். இவ்வளவு கூறுகிறாரே நண்பர் திரு. ரெளத்திரனிடம் நான் ஒன்று கேட்கிறேன், “இதுவரை எத்தனை தேர்தலை புறக்கணித்திருக்கிறீர்கள்? நெஞ்சை நிமிர்த்தி நான் கூறுகிறேன், ஒரு சட்டமன்ற தேர்தலையும், ஒரு உள்ளாட்சி தேர்தலையும் எனது நண்பர்களுடன் சேர்ந்து புறக்கணித்திருக்கிறேன். இதுவரை அரசு தந்த எந்த இலவச பொருட்களையும் நானும் வாங்கியதில்லை. எனது குடும்பத்தாரையும் வாங்கவிட்ட்தில்லை.

சரி விசயத்திற்க்கு வருவோம். எனது விமரிசன கட்டுரைக்கு தனது " கோபம் வரவில்லை சிரிப்புதான் வருகிறது. " என்ற கட்டுரை மூலம் பதில் தெரிவித்திருந்த திரு.ரெளத்திரன் எனது கட்டுரையில் நான் என்ன எழுதினேன் என்பதையே புரிந்து கொள்ளாமல் பதில் கூறியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. "ஒரு எழுத்தாளன் எந்த சூழ்நிலையில் எழுதுகிறான் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அவனது எழுத்தை மட்டுமே பார்த்தால் அவனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படும். " என்று தனது கட்டுரையில் பக்கம் பக்கமாக வசனம் எழுதிய ரெளத்திரன் இன்று என்ன செய்திருக்கிறார் என்பதை அவர் கண்டிப்பாக சற்று உணரவேண்டும்.


ஊருக்கு உபதேசம் அளிக்கும் நண்பர் ஏன் அதை தானும் கடைபிடிக்கவில்லை. ஒரு வேளை புரட்சியாய் எழுதுவதற்க்காக விசேச மையை நிரப்பியதால் தலைப்பாரம் தாளாமல் அவரது பேனா ஒரு பக்கமாக சாய்ந்து எழுதிவிட்டதோ என்னவோ? ஒன்று மட்டும் நன்றாய் புரிகிறது. அவருக்கு சிரிப்பு வரவில்லை, உண்மையிலேயே கோபம் தான் வந்திருக்கிறது. அதை இப்படி வெளிப்படுத்திவிட்டார் போலும். எதிர்ப்பவனை முட்டாளாக்கி ஒன்றுமில்லாமல் செய்துவிடும் நரியின் தந்திரம் அவருக்கு நிறைய இருக்கிறது. ஒரு வேளை அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு கண்டிப்பாய் நல்ல எதிர்காலும் உண்டு.


விமரிசனத்தை கண்டு பயந்து “இனி நான் வாய் மூடிக்கொள்கிறேன்” என்று கூறி என் பேனாவை பாலூற்றி மண்ணில் புதைத்துவிட நான் ஒன்றும் நண்பர் ரெளத்திரன் அல்ல. எதிர்பது எமனாகவே இருந்தாலும் எதிர்த்து நின்று சாவேனே தவிர உயிர் பிழைக்க வேண்டி ஒதுங்கி நிற்க மாட்டேன். கண்டிப்பாக மீண்டும் எழுதுவேன்.

எது எப்படியோ எனது கருத்தை சில பேராவது சரியாக புரிந்து கொண்டுள்ளனர். அதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது எழுத்துக்கள் சராசரி மனிதனுக்கும் பாமரனுக்கும் புரிந்துவிட்டது. ரெளத்திரன் போன்ற ஞானிகளுக்கு புரியும் அளவிற்க்கு எழுத இன்னும் பயிற்சி தேவை என்றால் அது எப்படி என்று அவரே விளக்கட்டும் நான் தெரிந்து கொள்கிறேன். தெரியாதை ஒப்பு கொள்ள எனக்கு எந்த வருத்தமும் இல்லை.


மீண்டும் சந்திப்போம்
ராஜேஸ் நன்னிலம்.

எழுதியவர் : ராஜேஸ் நன்னிலம் (30-Apr-12, 12:24 pm)
சேர்த்தது : rajeshnannilam
பார்வை : 320

மேலே