என் இந்தியா.....
புத்தரும் சித்தரும் வித்தக நித்தமும்
வந்து பிறந்தது இத்தகை பூமியிலே...
அட தத்துவம் பேசிடும் எத்தனை
சாத்திரம் நித்திய வேதங்களே....
நாட்டியம் பாட்டும் கலைகளை கூத்தும்
கவிமிகு பொன்னாடு எந்த நாட்டிலும்
இல்லா அகிம்சையும் தர்மமும்
வளர்த்திடும் இந்நாடு....
இசுலாம், சீக்கியம், வைணவம்,
புத்தம் சணனமடா
இனி எத்தனை மதங்கள் மண்ணில்
பிறப்பினும் இல்லை மரணமடா!
ஆயிரம் ஆயிரம் ஆரிய மௌரியர்
கொய்சாளர்கள், சாளுக்கியர்
ஒரு குப்தரும், கனிஷ்கரும்
மொகலாய் அசோகரும்
வந்தனர் போயினரே....
தாயின் கண்ணைக் குத்திடும்
குழந்தையைப் போல்
தாய் மண்ணை சிதைத்தாலும்
எங்கள் எண்ணம் சிதையாது...
இங்கே வந்தவர் யாவரும்
இந்திய வேரின் கிளைகளில் தோன்றிய
சந்ததிதான் என்றேன் - எங்கள்
சொந்தங்கள்தான் என்றேன்
ஆயிரம் தலைகளைக் கொடுத்து
சுதந்திரம் வாங்கிய தலைவர்கள்
ஆயிரம் பேர்....
வரும் தலைமுறை செழிக்க
தன்னுயிர் கொடுத்த தமிழர்கள்
ஆயிரம் பேர்...
கொடியோ மரக்கொடியோ
கட்சிக்கொடியோ அல்ல தோழா...
வெள்ளைக் கொடியோர்களை
அடியோடு முடிசாய்த்ததென் தோழா...
தீண்டாமை இல்லை
வெள்ளைக் கொக்கும் இல்லை
இது சமவெளி தேசமடா...
எங்கும் நதியை இணைத்துப்
பசுமைப் புரட்சியைப் பார்ப்பது
நம் இனமொழி நேசமாடா.....