மணாலி பனிச்சிகரம்

கொண்டையிலே பனிமுடிகள்.
கொள்ளுமளவுக்கு பசும்மரங்கள்.

அள்ளியள்ளிப் பருகிட, பனியுருகி
தேன் அருவிகள், இடைமடையில்.

வளைந்துநெளிந்து வரிசைபாடும்
வழிப்பாதைகள் கழுத்தின்நாகம்.

வழியினில் ஓர் அதிசயம்
ஆவிபறக்கும் வெந்நீரூற்று.

வந்தவற்கெல்லாம் அன்னம்.
நின்றவர்க்கெல்லாம் மோட்சம்.

சென்றவர்க்கெல்லாமும் இன்பம்.
நொந்தவர்க்கெல்லாம் இறைத்தஞ்சம்.

இப்படியான சிவம், தந்ததென்னவோ
விரக்தி, உன்துணை தவிர்ந்ததால்.

உணர்ந்தேன் ஒவ்வொருனொடியும்
உன்னிருப்பு உள்ளிருப்பின் அவசியம்.

எழுதியவர் : nilaa (30-Apr-12, 1:03 pm)
சேர்த்தது : ராச ராசாத்தீ
பார்வை : 213

மேலே