மன்னிப்பு...!

எதையோ மறைத்ததாய்
எனக்கும் சேர்த்து
கோபமாய் இருக்கிறாய் நீ ...
என் மனதையே உன்னில்
மறைக்க மறந்த நானா
மறைக்கப் போகிறேன்...
ஹும்ம்ம்....
அதற்காக உனக்கும் சேர்த்துநானே
மன்னிப்பு வேண்டுகிறேன் உன்னிடமே...
தவறுகள் உனதே ஆயினும்
எப்போதும்
மன்னிப்புகள் எனதாகவே இருக்கிறது...
ஏனெனில்
உனது கோபம் கூட
என் மேலான காதலால்தானே...!