திருடிகள் ஜாக்கிரதை
செல்லும் இடம் எல்லாம் இருப்பீங்க....
உங்கள பாத்து சொக்கும் படி நிப்பீங்க...
இரவல் பேனா கேட்பீங்க.... கூடவே
எங்க உயிரும் சேத்து பரிப்பீங்க...
கண்ணால தான் பேசுவீங்க...
கிட்ட வந்தா கையாளயும் பேசுவீங்க....
நட்புக்கரம் கொடுப்பீங்க....
காதலை சொன்ன
அண்ணன்மாரை அழைப்பீங்க...
கூட்டத்தில் பாத்து சிரிப்பீங்க...
தனிய வந்த மொரைப்பீங்க....
கடவுளே
நான் உன்ன கேட்டுக்குறேன்...
இந்த பொண்ணுகள
மட்டும் படைக்காதே...
போதும் போதும் இந்த பொழப்பு....
உங்க பின்னாடியே சுத்தும் பொழப்பு....
தெளிஞ்சிடோம் நாங்க.... இனி
திண்டாடுவீங்க நீங்க....
இனி வரமாட்டோம்
உங்க பின்னாடி
எங்க உயர்வை
காட்டுது கண்ணாடி
இனி எல்லா பசங்களுக்கும்
ஒரே எச்சரிக்கை
"திருடிகள் ஜாக்கிரத"