ஆழ்நிலை மயக்கம்

காதல் ஒரு ஆழ்நிலை மயக்கம்....
மயங்கி மயங்கி தெளிந்து தெளிந்து
மீண்டும் மயங்கும் வினைத்தொடர்.......

உன்னை சுற்றி உலகம் இயங்க.......
நீ மட்டுமே தனி உலகமாய் இயங்க...
சிரிக்க ரசிக்க நேரம் கொண்டு....
சிந்திக்க மட்டுமே முழு நாளையும் கொண்டு...

உனக்குள் இயங்கும் உலகம் உன்னை இயக்க...
உன்னை சுற்றிய இயக்கம் இயக்கமற்று நிற்க...

என்னிலை மறந்து...
இந்நிலை சுகிக்க...
இது வரை வாழ்ந்த நாட்களின் பொறுமை வென்று.....
இனி வாழும் நாட்களின் புதிரை கொன்று.....
என்னக்கானவள் இவளா என்று....?
தெளிந்த என் மனமோ தீவிரமாய் அன்று....

வார்த்தை துளி சிந்தும்...
அவள் சம்பாஷனை மழையில்...
அவள் ரசனை கோர்த்து..
நான் நனைந்த பொழுதில்....
மொழி திவளைகளாய் என்னை
குளிர செய்த கணத்தில்...


ஊண் மறந்து உயிர் கடந்து....
நான் காணும் கற்பனையின்...
நிஜங்களையும் நிறங்களையும்...
அவள் கண்களின் ஊடாக....
கண்ட அந்த நொடியில் தான்...
காதலின் ஆழ்நிலைக்குள் பயணிக்க தொடங்கினேன்.................

எழுதியவர் : பாரதிசரண் (3-May-12, 12:12 pm)
பார்வை : 222

மேலே