பொள்ளாச்சி அபியின் வேண்டுகோள்.!

எழுத்து காம் தோழர் தோழியருக்கு
அனைவருக்கும் வணக்கம்.!
இந்த வட்டத்தில் இணைந்திருக்கும் ஒரு தோழருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.அத்திருமணத்திற்கு முதல்நாள் எழுத்து தோழர்களுக்கான ஒரு சந்திப்புக் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாமா.?. அதுவும் ஒரு கவியரங்கத்தோடு ஜமாய்த்துவிடலாம்.
ஏனெனில் நாம் இக்கூட்டத்திற்காக தனியாக ஒரு தினத்தை தேர்ந்தெடுத்து.வருபவர்கள் அனைவருக்குமான -குறிப்பாக தோழியர்களுக்கு -வசதிகளையும் செய்து கொடுப்பதில் நடைமுறைச்சிக்கல்கள் நிறைய உண்டு.அதனால்தான் இந்த ஏற்பாடு.
இது சரியென்றால் உங்கள் கருத்துக்களின் மூலம் பதிலைத் தொடருங்கள்.வாழ்த்துக்கள்.!