தொலையாத பாசம்

எனக்கே தெரியாமல்
எனக்காக சேர்த்த பணத்தை
நீ தொலைத்தழுத அந்த
துயர நாளை இன்று
நினைத்தாலும் இதயம்
வலிக்கிறது!
தொலைந்த பணத்திற்காக
அல்ல தாயே! தொலையாத
உன் பாசத்திற்காக!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (5-May-12, 11:28 am)
பார்வை : 252

மேலே