மே 7

இறைவனை உணர்ந்த நாள்,
உள்ளத்தால் தெளிந்த நாள்.
தெரியாமல் நுழைந்த நாள்.

உலகம் எனக்காக உதித்த நாள்,
என்னை உனக்காக பதிந்த நாள்,
மறுஜென்மம் நிஜமாய் நினைத்த நாள்.

உன் கண்ணொளியில், கடைக்கண்ணின்
ஓரப்பார்வையில் உயிர்கொண்டு
என் விழித்திரையின் ஓவியமான நாள்.

உன் புன்சிரிப்பின் அழகினையும்,
கவிபேசும் விழிக் கவிதையினையும்,
நடையழகின் நடனத்தையும்,

கொள்ளளவின் நேர்த்தியினையும்
உணர்த்தி, உச்ச சூரியனையும்
சந்திரனையும் கொண்ட பிறந்த நாள்.

நேராய் வாழ்த்திடவே முடியாத,
நேர்முகமாய் சேர்ந்திட தெரியாத,
நிழலாயின நினைவுத் திருநாள்.

எழுதியவர் : nilaa (5-May-12, 12:03 pm)
பார்வை : 295

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே