அன்பே அமுதா!

அன்பே அமுதா!
உன் ஆருயிர் காதலன்
அன்புடன் எழுதுவது....
அன்று....
திருப்பாற்கடலை
கடைந்தபோது
கிடைத்த நீ
எல்லோருக்கும்
விலையில்லாமல்...
இன்று டா.....க் கடையில்
விலை கொடுத்து உன்னை
வாங்கவேண்டியுள்ளது
கிடைக்கும் காசை
வீட்டில் கொடுக்காமல்
உன்னிடம் கொடுத்துவிட்டு….
உளறிக்கொண்டு இருக்கிறேன்

இப்படிக்கு
உன் உயிர் காதலன்
இந்திய திருநாட்டின்
ஒரு ஏழை ‘குடி’மகன்!

(கட்டிங்-க்கு கையேந்தும்
அன்பரே...அமுதத்தை
அவர்கள் குடித்துவிட்டார்கள்
ஆதிசெஷன் கக்கிய
விஷத்தைத்தான்
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (8-May-12, 7:50 pm)
பார்வை : 230

மேலே