கடவுள் VS மனிதன்....
கடவுள்-
தன்னைக் கடவுளாய்
அறிந்ததே இல்லை
மனிதனைப் படைக்கும் வரை.
பாவங்களை அவர் மன்னிப்பார்
என்றறியும் வரை-
மனிதன் கடவுளைக்
கும்பிடவே இல்லை.
கடவுள்-
எந்த மொழியாலும்
அர்ச்சிக்கப் பட்டதே இல்லை
மனிதன்
மொழியைக் கண்டறியும்
நாள் வரை.
பின்-
அவர் தெருவுக்கொன்றாய்
வீசி எறியப்படவே இல்லை-
மனிதன்-
சாதியைக் கண்டறியும் நாள் வரை.