தமிழரின் தேசம்

முன்பொருநாள்
எண்களின் வலிமையை வளங்களை
எம் பரம்பரையே புதைத்து விட்டது- மாற்றானை நம்பி
தோண்டி எடுக்க நினைக்கிறோம்
தோழர்கள் எம் மண்மீது நட்ட கல்லுக்கு கீழ்
தோல் கொடுக்க யாரும் இல்லை
தோழமைக்கும் யாருமில்லை
எப்போதும்

எண்களின் ஊர்கலில் எல்லை காக்க எத்தனை சாமிகள்
சாமிகளின் இருப்பிடங்களிலும் சரித்திரத்தை மாற்ற சதிகள்
சந்ததியாய் வாழ்ந்த மண்ணில் சாத்தான்கள் அரண்கள்
இந்துத்துவத்தை நசுக்க புத்த நரன்
புதர்கள் முளைத்தது போல் சிலைகளாய்

சந்தனமும் திருநீரும் காணாமல் போகுமோ?
அல்லிப்பூ ஆணையாழ் ஆன்மிகம் அழியுமோ?
அச்சம் தொடருது இச்செகத்தில்
மிச்சம் இருப்பதை காப்போமா? யார் அறிவார்?

காவி உடைகளில் பலர் பக்கத்தில் வரும்போதுதான்
தெரியும் எம்மதமில்லை இவர் பாவி யுடைகள் தரித்திருப்பது பற்றி

உரிமை மீட்கும் தருணத்தில் ஊதாரிகளாக எம்மவர் செயலகங்களில்
தலைமை இல்லாமல் தடுமாறும் எம்மினம் இன்று
தாயகத்தை கேட்பதை விட்டு தம்முள் அடிபடும் தலைமைகள்

வீரம் விளைந்த மண் வீழ்ப்து விடாதென ஓர் நம்பிக்கை மட்டும் மனங்களில்
வீழ்ந்த நாம் ஏழவேண்டும் புதைந்து விடலாமா?

தமிழன் ஆண்டான் என்றது போதும்
எழுவவோம் மீண்டும் ஆழ்வதர்க்கே
என சந்ததிக்கு சொல்லிக்கொடு
அவர்களாவது சாதிக்க எழட்டும்

ஈழம் எமக்கில்லியெல்
வீறேதுதான் ஈடாகுமா தமிழா?
இத்த்கனை இழந்த பின்னும்
தமிழர் தாகம் தீராமல் எப்படி தழைப்பது

ஆனாலும்

தரணி எங்கும் தர்மம் வெல்லும் -தயங்காதே தமிழா
அப்போதுதான் நாங்கள் ஈழம் வேல்வோம்
இருந்தும்

தமிழன் ஆண்டான் என்றது போதும்
எழுவவோம் மீண்டும் ஆழ்வதர்க்கே
என சந்ததிக்கு சொல்லிக்கொடு
அவர்களாவது சாதிக்க எழட்டும்

எழுதியவர் : கிருஷ்ணா (11-May-12, 1:11 pm)
பார்வை : 253

மேலே