எழுத்து.காமில், கவிஞனுக்கும், வாசகனுக்குமான முக்கிய கருத்துப்பரிமாற்றம்

அனைத்து எழுத்து.காம் வாசகர்களுக்கும், கவிஞர்களுக்கும் மற்றும் எழுத்து சார்ந்த படைப்பாளிகளுக்கும் A. பிரேம் குமார் -ன் வணக்கங்கள்.

நான் கதை, சிறுகதை, கட்டுரை இவைகளைவிட, அதிகம் கவிதைக் கடலில் நீந்துபவன், நீந்தத் துடிப்பவன். ஆனால், அவைகளையும் ஆர்வத்துடன் படிப்பவன்.

இப்படைப்பு, கவிஞர்களின் உள்ளத்தேடலை
முழுவதுமாய் இல்லாதுபோனாலும்
முடிந்தவரை வெளிக்கொண்டுவர முயற்சிக்கும்.

இப்படைப்பு ஒரு வாசகனுக்கும், கவிஞனுக்கும் உள்ள நற்கருத்துப்பரிமாற்றமே. (வேண்டுமானால், படைப்பை வெளியிட்டபிறகு, ஒரு நல்ல கருத்துயுத்தமாகவும் மாற வாய்ப்பிருக்கலாம்).

இப்படைப்பில், நான் யார் மனதையும், எவ்விதத்திலும், நேராகவோ, மறைமுகமாகவோ புண்படுத்தும் எண்ணத்தில் எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏனெனில், இன்றும், இதுவரையும், இனியும், இத்தளத்திலுள்ள அனைவரையும் தோழர்/தோழி களாகவே நான் நினைப்பவன்.

படைப்பின் தொடக்கம்...............

நான் படைத்த, கவிஞன் (பகுதி - 2 ) கவிதை,

""""
பலனேதும் பாராமல் - நற்க்கருத்துயுத்ததில்
பரமனுக்கும் பணியாமல்
பணியாய் நன்செய்து
கவிபடைப்பான் பாருக்கு
- கவிஞன்
- A. பிரேம் குமார்

"""""

கவிஞன், ஒரு கர்மயோகியைப்போன்று; செய்யும் பணியில் தனக்கான பலனை எதிர்ப்பார்க்காது, உலகுக்கு நன்மை செய்துவிட்டு, அடுத்தப்பணிக்காக, முடித்தப்பணியிடத்தைவிட்டு நழுவிச்செல்பவன். அவன் அறிவை, யாராலும், ஒரு வட்டத்துக்குள் அடைக்கமுடியாது.

நண்பர், திரு.பரிதி முத்துராசன் அவர்கள், இக்கவிதைக்கு மனம் திறந்து கருத்து தெரிவித்தார்.

"பலனேதும் பாராமல் - நற்க்கருத்துயுத்ததில் -இந்த வரிகள்தான் என்னை மீண்டும் எழுத வைத்தது வாழ்த்துக்கள்" - பரிதி முத்துராசன்.

அவருக்கு பதில்கருத்தை நான் வழங்க முற்ப்பட்டபோது, பிறந்தது என் அடுத்த கவிதை...

""""""""
கவிஞர் உள்ளம் (பகுதி - 3)

மதிப்புபெண் நாடாமல்
கவிதையின் கருத்தை நாடி - அதுதரும்
வாசகர் கருத்தைத் தேடி
வாசம் கொள்வது
கவிஞர் உள்ளம்.

மதிப்பற்ற மதிப்பெண்ணை
மதமென அழைப்பான்
கவிஞன்.
-A. பிரேம் குமார்

"குறிப்பு: இவ்விடத்தில், மதம் என்பது மதம்பிடித்தலை குறிக்கும்"

""""""""

இக்கவிதைக்கு கருத்து தெரிவித்த, அன்புக்கும், மரியாதைக்குமுரிய தோழர் திரு .மு. ராமச்சந்திரன் அவர்கள், தன கருத்துமூலம் சில அறிவுப்பூர்வமான கேள்விகளை கேட்டிருந்தார்.

""""""
A பிரேம் குமார் அவர்களே,
எந்த ஒரு படைப்பாளியும், அது வியாபார நோக்கமாக இருந்தாலும் பண முடிப்பிற்கு அப்பாற்பட்டு எதிர் பார்ப்பது பரிசும் / பாராட்டும் அது தான் ஒரு படைப்பாளிக்கு ஊக்கத்தை கொடுக்கும் - இங்கு பாராட்டு என்பதை மதிப்பெண் அளவுகோலில் வைத்துள்ளார்கள் - படிக்கும் பொழுது சிலர் அந்த பகுதியை கவனிக்காமல் இருக்கலாம் - ஏன் நானே கூட சில கவிதைகளுக்கு கருத்து சொல்ல தெரியாமல் மதிப்பெண் கொடுத்து வந்திருக்கிறேன். அதனால் மதிப்பெண் எதிபார்த்தும் நல்ல கவிதைகளை படைக்கலாமே..
- மு.ராமசந்திரன்.
"""""""

வேறுசில எழுத்துப் படைப்பில் மும்முரமாக இருந்த நான், அவருக்கு பதில்கருத்தாய்,

""""""
மிக்க நன்றி. எனக்கு மிகவும் பிடித்தமான, கேள்விகள் கொண்ட கருத்தை படைத்தமைக்கு.
இவ்வாறு, கருத்துப்பரிமாற்றமுள்ள கருத்தை விரும்புபவன் நான்.
இதுவரைக்கும் , உங்கள் கேள்விக்கான பதிலை நான் கொடுக்கவில்லை. தயவு செய்து பொறுங்கள், தயாரித்து கொடுக்கிறேன் - A. பிரேம் குமார்
""""""
- என்று கூறியிருந்தேன்.

இப்போது, நான் அக்கேள்விக்கான பதிலை இங்கு தருகிறேன்,

முதலில் என்னை தவறாக எண்ணவேண்டாம். கவிஞன் மதிப்பெண்ணை ரசிப்பவன் அல்ல. இதை மனம் திறந்து, உள்ளக்கவிஞனின் இருப்பிடத்தில்நின்று உரைக்கிறேன்.
உள்ளக்கவிஞனின் ஆனந்தம் மற்றும் ஊக்கம் எதில் உள்ளதென்றால்,

உண்மையில், அவன் எழுதிமுடிக்கும் ஒரு சிறந்த கவிதை, முதலில் அவனையே ஆனத்தப்படுத்தும் (இத்தகைய ஆனந்தத்தை எனக்கு வார்த்தைகளால் விளக்கத் தெரியாது, மன்னிக்கவும்). இவ்வாறு இதில் ஆனந்தம் கொள்கிறான்.

பிறகு, அக்கவிதையின் "மெய்ப்பொருள்" அறிந்தோ (அ) அறியவிருப்பம் தெரிவித்தோ, வாசகன் அக்கவிதைக்கு கருத்தோ (அ) விமர்சனமோ செய்கையில், அதில் மேலும் கவிஞனுக்கு ஆனந்தமும், ஊக்கமும் கூடும். வாசகனுடனான கருத்துரையாடலும் நீளும்.

கருத்துரையாடலின் நிறைவாக,

கவிஞனும், கவிதையை வாசிப்பவனும் ஒரு நல்ல முடிவுக்கு வந்தவுடன்,
கவிஞனுக்கு, சிந்தனைமிக்க, பயனுடைய நற்ச்செய்தியை தன் கவித்திறன் மூலம் வாசகனுக்கு அளித்தபெருமையில் "பேரானந்தம்" கொள்கிறான். அத்தகைய நல்ல கருத்துப்பரிமாற்றங்களுக்கு இடையிலேயே, சில சமயம், கவிஞனின் அடுத்த கவிதைக்கான மூலப்பொருளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பல உண்டு.

வாசகனும், ஒரு நல்ல கவிதையை நம் தாய்மொழியில் கண்டோம், படித்தோம், பாடி உரையாடினோம் என்று மகிழ்ந்து, மன நிறைவுகொண்டு பரவசமடைகிறான்.

குறிப்பு: கவிஞன் கசப்பான கருத்துக்களையும் மனக்கசப்பில்லாமல் வரவேற்ப்பவனே. அது, படைப்பாளியான அவனுக்கு சில அனுபவங்களைத் தருவதோடு, மேலும் உலகின் பல கோணங்களை அவனுக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆதலால், அவன் மேலும் அறிவில் சிறந்தவனாகிறான்.

மனதில் கைவைத்து இப்போது சொல்லுங்கள், ஆனந்தம் எங்குள்ளது என்று.
மதிப்பெண் கொடுத்துவிட்டு மறைந்துபோவதிலா?
இல்லை,
அருமையான அறிவான கருத்துப்பரிமாற்றம் கொண்டு ஆனந்தம் கொள்வதிலா?

சற்று யோசித்து பாருங்கள், இத்தளத்திற்கு ஏன் வந்தீர்கள் என்று,
மதிப்பெண் கொடுப்பதற்க்கா?
இல்லை,
கருத்துப் பரிமாற்றம் செய்து, மனதில் அமைதியோ (அ) ஆனந்தமோ கொள்வதற்கா?

எதில், நல்ல கருத்துப்பரிமாற்றமும், அமைதியும், ஆனந்தமும் கிட்டும்,
மதிப்பெண்ணிலா? இல்லை
கருத்தை பரிமாற்றம் செய்வதிலா?

எழுது.காமில் பதிவு செய்யும்போது, யாரிடமும் சொல்வதில்லை இங்கே மாதம் மாதம் கவிதைப்போட்டி நடத்தப்படுமென்று. அவ்வாறு அவர்கள் சொல்வாறேனால், 50% பேர்கள் உள்ளே நுழைவதற்கு முன்னரே, மேலும் சில புதியவர்கள் கவிதை எழுத முயற்சிப்பதற்கு முன்னரே, எதுக்குடா வம்பென பதிவு செய்யாதும் விட்டிருப்பார்கள்.
அவ்வாறில்லாமல் எழுது.காம், தமிழ்மக்கள் தங்கள் கருத்துப்பரிமாற்றலை கவிதைகளாலும், கட்டுரைகளாலும் இங்கே தொடரட்டும் என்று நினைத்து ஆரம்பித்திருப்பார்.

குறிப்பு: உதாரணமாக, "புதுக்கவிதை"-யை சொடுக்கிட்டு, பட்டியலுக்கு கீழே பாருங்கள், எத்தனை பதிவேசெய்யாத வாசகர்கள், மதிப்பெண் கொடுக்காமலே தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் ஆர்வத்தை முயற்சித்திருக்கிறார்கள் என்று. எழுது.காம் அத்தகைய கருத்து ஆர்வத்திற்காகவே அனுமதித்துள்ளது.

ஒன்று மட்டும் உறுதி,
நல்ல கருத்துப்பரிமாற்றல் இருந்தால்
மிக நல்ல படைப்பாளிகள் கிடைப்பர்;
மதிப்பெண்ணே முக்கியமென்றால்
மனனம்செய்துப் படிக்கும் குழந்தைகள் கிடைப்பர்.

(நான் தனிப்பட்ட யாரையும் குறைகூறவில்லை, என் அறிவுக்கு எட்டிய நல்லதை கூறுகிறேன்)

என்னைபொருத்தவரையில்,
மதிப்பெண்,
மதிப்பற்றது.
ஆனால், இத்தளத்தில், நல்ல படைப்பாளிகளை உருவாக்க, நல்ல தமிழ்ப் படைப்பாளியை அனைவரும் மனம் திறந்து பாராட்ட, ஒரு நல்ல சூத்திரமும் உண்டு.

இத்தளத்தில் அட்டவணைகள் அதிகம் உண்டு.
ஆதலால், அது என்ன சூத்திரம் என்றால்,

"நண்பர்கள்" என்பதை சொடுக்கிட்டு,
பிறகு "கவிதை"யை சொடுக்கிட்டு,
பிறகு, இந்த வாரமோ, இந்த மாதமோ சொடுக்கிட்டு,
கட்டங்களை கூர்ந்து கவனியுங்கள்.

தனிப்பட்ட ஒவ்வொருவரின் கருத்துப்பரிமாற்ற ஆர்வத்தை கூர்ந்து கவனியுங்கள்.
"பார்வை" - படைப்பாளியின் கவிதையை பார்வையிட்டவர்கள் எத்தனை பேர்.
"கருத்து" - படைப்பாளி எத்தனை பேருக்கு, படைக்கும் ஆர்வத்தை அதிகரிக்க/ஊக்குவிக்க மற்றும் தமிழை வளர்க்க கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழை வளர்க்க, நல்ல கருத்துப்பரிமாற்றம் மேற்கொண்ட படைப்பாளி = ratio of ("கருத்து" : "பார்வை")

(பதிவு செய்துள்ள அனைத்து நண்பர்களும் இந்த அட்டவணையில் உள்ளதாகவே நினைக்கிறேன்)

படைப்பாளியை அதிகம் ஊக்குவிக்க, வாசகனுடனான நற்கருத்துப்பரிமாற்றலோ (அ) நற்கருத்துயுத்தமோ-தான் மிக முக்கியம்.
அது தமிழையும் வளர்க்கும். ஆகையால், தமிழ் வளர்ப்பதில் எவ்வாறு படைப்பாளிக்கு பங்கு உண்டோ, அவ்வாறே, வாசகனுக்கும் தமிழ் வளர்ப்பதில் பங்குண்டு.

தொடரும்......

எழுதியவர் : A பிரேம் குமார் (15-May-12, 12:28 am)
பார்வை : 351

மேலே