உன் பாதம்பட்ட மண் எங்கே 555
பெண்ணே.....
உன்னில் நான் கொண்ட
காதல் வானம்போல்...
நீ கொண்ட காதல்
வானவில் போல்...
எப்போது தோன்றி மறையும்
தெரியவில்லை எனக்கு...
நிலவை தேடும் வானம்போல்...
நான் உன்னை தேடிக்கொண்டே
இருக்கிறேன்...
நீயோ ஓடிக்கொண்டு இருக்கும்
வென்மேகம்போல் ஓடிகொண்டே...
மறைய நினைக்கிறன்
மண்ணில்...
என் இதயம் மறுக்கிறது...
உன் பாதம் பட்ட மண்ணில் தான்
நான் புதைவேன் என்று...
என் மரணம் கூட மறுக்கிறது...
உன் பாதம் பட்ட மண் எங்கே...
நான் புதைந்து விடுகிறேன் மண்ணில்.....