அம்மா (மரண குழந்தை)

பிறந்த உடன் இறந்த குழந்தைக்கு தாய் ...
வெண்மதி ஒன்று மண்மதி வந்து
என்மதி காணும் முன்னே
இறைவன் சன்னதி சேர்ந்தது
என் நிம்மதி போனது !!!
இளந்தென்றல் ஒன்று மலர்
தீண்டும் முன்னே மண்ணில்
மறைந்தது என் கண்ணில்
சோகம் நிறைந்தது !!!
மலர் செண்டு ஒன்று தேன்
சிந்தும் முன்னே வாடிப்போனது
என் மனம் அதனை தேடி போனது !!!
கயல்விழி இரண்டு கண்விழிக்கும்
முன்னே கருகிப்போனது
என் இதயம் உருகிப்போனது !!!
பூவிதழ் ஒன்று புன்னைகைக்கும்
முன்னே சிதறி போனது
என் நெஞ்சம் பதறி போனது !!!
தேன்மொழி ஒன்று மனம் தீண்டும்
முன்னே மறைந்து போனது
என் உள்ளம் உறைந்து போனது !!!
இறந்தும் நீ வாழ்கிறாய் !
இருந்தும் நன் இறக்கிறான் !
அம்மா !!!