LOVE AT NEUTRAL (இது காதல்கவிதை இல்லை)

இத்திசை யன்பு எதிரே நிற்க
எத்திசை யம்பு இதயம் தைக்க
ஒத்திகை யில்லை உயிரை மாய்த்தல்
சத்திய மிங்கே மறுஜனன மில்லை

- A. பிரேம் குமார்


குறிப்புகள்:
1.
இத்தளத்தில்,
இதுவரை காதல்கவிதை நானெழுதவில்லை
இதுவும் முழுக்காதல் கவிதையில்லை
இதில் துளிக்காதல் கலக்கத் தவறவில்லை

2.
இத்தளத்தில்,
நானெழுதத் தொடங்கும்போது ஒரு முடிவு செய்தேன். என் கவிதைகள், சமுதாய மற்றும் வாழ்க்கை நலன் சார்ந்த கருத்துக்களையே பேசவேண்டுமென்று. ஆதலால், முதல் நூறு கவிதைகளில், காதல் பற்றி பேசக்கூடாதென்றிருந்தேன்.
என் படைப்புகள் 95 எட்டியபோது, சரி, 100 வது படைப்பு ஒரு காதல் சார்ந்ததாக இருக்கட்டுமென நினைத்தேன். ஆனால், 100 வது படைப்பாக, "எழுத்து.காமில், கவிஞனுக்கும், வாசகனுக்குமான முக்கிய கருத்துப்பரிமாற்றம் (பகுதி - 2 )" -ல் இரவு முழுதையும் செலவிட்டேன். எனக்கு சந்தோசம் தான், ஏனெனில், ஏறக்குறைய 100 வது படைப்பிலும் வாழ்க்கை கவிதைகளை அதிகம் பேசி இருந்தேன். இனிமேலும், சமுதாய மற்றும் வாழ்க்கை சார்ந்த ............................... தொடர்வேன்.

எழுதியவர் : A பிரேம் குமார் (22-May-12, 7:26 pm)
பார்வை : 405

மேலே