அன்பு - குறையாத செல்வம்..
என் அன்புணர்வை நானே அவமான படுத்திவிட்டேன் ,
ஆம்,
தகுதியற்றவர்களிடம் எனதன்பை கொட்டிவிட்டேன்.
என்றாலும், ஒரு ஆறுதல்,
என்னிடம் குறையாத செல்வம் அது,
யாருக்கு வேண்டும்?!!
எடுத்துகொள்ளுங்கள்...
எங்கும் சுயநலம் கலந்த அன்பு,
ஐயோ அதை அப்படிச்சொல்வது கூட தவறு..
ஆம்,
சுயநலமாய் அற்புதமாய் நடிப்பு,
ஒரு நாடகத்தை அரங்கேற்ற எத்தனை நாடகங்கள்,
அணிவகுத்து வரும் வர்ணம்பூசிய வார்த்தைகள்,
எத்தனை முறை வெள்ளோட்டம் பார்த்திருப்பார்களோ..
நிச்சயமாய் சில விருதுகள் வசமாகும்..
நம்பிக்கைக்கு கிடைத்த தோல்வி
இதற்க்கு துரோகம் என்று பொருள்.
நினைத்துப்பார்க்கையில்
முத்துச்சிதரல்களாய், கண்களின் உப்புச்சிதரல்கள்..
செய்யாத பாவங்களை கண்ணீரால் கழுவ முயல்கிறேன்..
"எதை கொடுக்கிறோமோ, அதையே பெறுவோம் " என்கிறார்கள் ,
இதுவரை பெற்றதில்லை நான்..
என்றாலும்,
உலகம் ஒரு நாள் நீதிபெரும்,
அந்நாள் நாங்கள் யாவும் பெறுவோம்...
நம்பிக்கையுடன்.....