இதுதான் என் வாழ்வின் கோலம்..!
வளமாக வாழ்த்தான்,
இப்பிறவி எடுத்தேன்..!
ஆனால், வாழ்க்கை என்னை
இட, வலம், பாராமல் இன்னல்,
என்னும் இடிபாடுகளுக்குள்
இழுத்துச்சென்று, என்னை
அடித்து சென்றது...!
சிறகொடிந்த பறவையாய்,
திக்குமுக்காடிப்போய்,
சிந்தனையற்று சிறு குழந்தையாய்,
சிரிக்கவும் முடியாமல்,
அழுகவும் முடியாமல்,
கற்பத்தில் காத்தருளிய,
அகிலத்தின் கடவுளாகிய,
அன்னையின் இடுப்பில்,
இளைப்பாருகிறேன்..!
இறைவா...
என் பிறவிக்கு
ஏன் குறைவா...?
நீ... உறைவா...!
மதுரை வாசகம்
அரபு மண்ணிலிருந்து..!