இறுதி நியாபகங்கள்

ஓரடிக்கும் ஈரடிக்கும்
சொத்து தகராறு ,
ஒய்கின்ற இடத்தினிலே ஒத்துப்போரானாறு !

காசு என்றும் பணம் என்றும்
பிரித்து பார்த்தாரு ,
கடைசியில் சில்லறையை
இறைத்தவாறே போய் சேர்ந்தாரு !

ஜாதி மதம் பார்த்து பார்த்து
சகவாசம் வச்சாரு ,
இவருக்காக குழி தோன்டியவரை,
இறுதியாய் பார்த்தாரு !

எழுதியவர் : வினாயகமுருகன் (29-May-12, 7:55 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 181

மேலே