40வது அமீரக தேசியத் தின கவிதை...

மதுரை வாசகம்
இந்த கவிதை நேற்று..
40வது அமீரக, தேசியத் தின,
விழாவை முன்னிட்டு,
அபுதாபி சங்கத்தின் சார்பில்
வாசிக்கப்பட வேண்டிய தருணத்தில்,
ஓர் சில சூழ் நிலை காரணமாக,
கைவிடப்பட்டு கஷ்டத்தை ஏற்படுதியது...!
என்ன சொல்ல..? இன்னும் நேரம்,
கூடிவரவில்லை அவளதான்..
பராவயில்லை மீண்டும் ஒரு முறை,
வரும் என்ற ஆசையில்..!
வலைகுடா தமிழருக்காக..
என் கவிதையில் இருந்து செதுக்கப்பட்ட
சில் வரிகள் உங்களுக்காக இதோ..!

இன்று 40வது..அமீரக தேசியத் தின
விழாவை முன்னிட்டு..!
அபுதாபி தமிழ் சங்கம்
சேர்ந்து நடத்தும்..!
இவ்விழாவில்விற்கு
வருகை தந்து..
இங்கு கூடியிருக்கும்
என் தேசத்தாய் மகன்கள்
அனைவருக்கும் மற்றும்,
அனைத்து வாழ்
இந்திய தமிழருக்கும்
வாழ்விய வணக்கங்கள்..!
சொல்லிக்கொண்டு
இந்த இனிய நள்ளிரவில்..

கண்ணீர் வாங்கிய,
இவ் வலைகுடா நாடும்..!
எங்கள் வாழ்க்கை வடும்..!
என்ற தலைப்பில்..?
சிறு உணர்வு எழுத்தும்,
உங்களின் மனதில் அழுத்தும்
என்ற உய்ப்பில் ஓர் கவிதை..!
இதோ உங்களுக்காக...?

தாய்யின் பார்வையில்லா..?
தனிமையின் கோர்வையில்,
தவிப்பின் போர்வையில்,
தாய்பாசத்தை தர யாருமில்லாத
மற்ற நாட்டில் வசித்து,
வறுமைக்காக வாழ்க்கையை,
விரக்தில் ஓட்டும்,
அத்துனை கண்ணீருக்கும்,
இக் கவிதை ஆறுதல்..

நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை,
எப்போது கிடைக்குமோ.?
எங்கள் கண்ணீரின் சோகம்,
இன்று இங்கு தீருமோ..!

இருக்கும் உலகத்தில்,
இருப்பதை விட்டுவிட்டு,
இன்பம் இல்லா இன்னாட்டில்,
பணத்தை வைத்து,
பாசம் எங்கு தேட..?
தேடி பாரத்தும், கூடி சிரித்தும்.,
இழப்பது என்னவோ..!
சந்தோசம், வாழ்க்கை,
வயதுகளை மட்டுமே...!

ஏதோ, நினைவுகள் மட்டும்,
எங்கள் தாடியை தடவிக்கொண்டு,
இதோ..! இந்த பாலைவனத்தில்,
பாதை முடியா.! பாதை நோக்கி,
எங்கள் பாதம் பயணிக்கிறது..!
என்றாவது ஒருநாள் அந்த வெற்றியை,
பார்த்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே..!
எங்கள் வாழ்க்கை....?

இதோ.......
வரிந்தனைத்த பாசமும்..
விளையாண்ட வனமும்..!
விரிந்த எம் கிராமமும்..!
நாங்கள் வாழ்ந்த சந்தோச,
சங்கீத வாழ்க்கையும்..

அங்கு எப்படி வாழ்ந்தோம்
எப்படி கூடி, பாடி, மகிழ்ந்தோம்..!

இன்று இந்த,
இனிய இரவில்..
கனாக் கவிதையில்
நாம் அனைவரும்..
மாறவோம்....

நாங்கள் மாற வேண்டும்..!

கண்மாய் காட்டில்,
கரிசமைக்க வேண்டும்,
கலத்து மேட்டில்,
பசியாற வேண்டும்..
மயக்கத்தில் யாழெடுத்து
இசைமீட்ட வேண்டும்..!

இசை உண்டு,..!
இனம் கண்டு, இன்று,
இலைபோட வேண்டும்..!

மேகத்து சாப்பாட்டை,
பூமிக்கு வழிவிட்டு,
வானத்து மழையோடு,
துளியாட வேண்டும்.

மலர்களின் மேலமர்ந்து
கனாக் காணவேண்டும்
மகரந்த தேனெடுத்து
உடல் பூசவேண்டும்

வண்ணத்துப் பூச்சியாய்
நாங்கள் மாறவேண்டும்
எங்கள் வாழை தோப்பெங்கும்
பறந்து வரவேண்டும்


எங்கள் ஆட்டுக் குட்டியாய்
நானாக வேண்டும்
அரசமர இலைத்தின்ன
தாவவேண்டும்
இங்கும் மங்கும் துள்ளி
ஓடவேண்டும்

என்னவள் ஒய்யார இடுப்பில்
நாங்கள் ஓய்வெடுக்க வேண்டும்
அவளின் அழகான தோள்மீது
இளைப்பாற வேண்டும்

கம்பங்கதிராக
உருமாற வேண்டும்
அவளின் கைகளுக்குள்,
ககசங்கி உணவாக வேண்டும்

தெப்பத்தில், பூசுகின்ற மஞ்சளாய்
நான்வரவேண்டும்
உன் முகம் தொட்ட சுகத்தில்
நாங்கள் கவியெழுத வேண்டும்


இதேல்லாம் எப்போது கிடைக்குமோ.?
எங்கள் கண்ணீரின் சோகம்,
என்று, எப்போது தீருமோ..!

தமிழனே இன்று இத் அமீரக தேசிய
தின திருநாள் நமக்கு வாச பெருநாளாக..?
மாற உம் சாந்தோச வாழ்க்கை ஏற....!
எல்லாம் கடைப்பிடி..?
நாளை உன் வாழ்க்கை
உன் நினைப்படி....!

அறிமுக படுத்து தோழா,
முழு உலகத்திற்கு உன்னை,
தெறி முகம் படுத்து..!

உன் அன்பு எல்லாம்,
இங்கு அம்சம் ஆகும்.,
அனைத்து கொள் தோழா..!

உன் இரக்கங்கள் எல்லாம்
இலக்கியங்கள் ஆகும்
இரக்கம் கொள் தோழா..!

உன் கருனைகள் எல்லாம்,
காவியங்கள் ஆகும்,
கருணை கொள் தோழா..!

உன் ஆசை எல்லாம்..
நாளை பஷை காட்டும்..
பயம் கொள்ளா..! தோழா..!

உன் பொறுமைகள் எல்லாம்
பொற்கோயில்கள் ஆகும்,
பொறுமை கொள் தோழா..!

உன் வறுமையெல்லாம்
அருமை பாடும்,
வெறுமை வேண்டாம் தோழா..!

உன் திறமை எல்லாம்
தெய்வங்கள் ஆகும்
திறமை கொள் தோழா..!
உம் வளைகுடா வாழ்க்கை
அருமையாகும் அழகாகும்..
பொருமைகொள் தோழா..!

கஷ்டப்படு கண்ணீர் சிந்தாதே..!
துன்பப்படு துவண்டு போகாதே..!
கவலைப்படு கலையிழந்து விடாதே..!
இன்பபப்டு இடிந்து போகாதே..!

இந்திய தேசத்தில்
பிறந்த தமிழனே
நீ என்றுமே..!
தாழ்ந்து போகாதே
தட்டிகொடுக்கு என் கவிதை
ஒரு நாள் வட்டி கொடுக்கும்

என் தேசத்தின் பாசங்களே..!
என் வறுமையின் வாசங்களே.!

மதியை மதிக்காதே...!
விதியை துதிக்காதே..!

இறைவன் நமக்கே..!
வெற்றி உமக்கே..!

முயற்சி செய் உன்னால்
முடிந்த வரை அல்ல..!
நீ நினைத்த செயல் ..
முடியும் வரை......! என்ற
அப்துல் காலம் வரிகளோடு..!

வாய்பளித்த அபுதாபி
தமிழ் சங்கத்தின் தலைவர்
மற்றும் இங்கு இருக்கும்
அனைத்து தலைவர்களுக்கும்..
தமிழ் பெருமக்களுக்கும்
நன்றி கூறி விடை பெறுவது
மதுரை கருப்புவாசகம்..!
நன்றி..........!
நன்றி................!
நன்றி..............!

எழுதியவர் : (30-May-12, 4:07 pm)
சேர்த்தது : vasagam jasmine
பார்வை : 231

மேலே