ஆதி வித்துகள்

எண்ணங்களுக்கு தூபம் போட்டு
வண்ண கனவுகளை வளர்க்க வேணாமடா
நல் உள்ளங் கொண்டு வல்லோன் வலியோன்
வாழ்த்திட்டால் போதுமடா

மாய உலகில் சாயமிகு காயத்தை
அகற்றினால் மன காயங்களும் மாயமாகுமடா
இகழ்ச்சியும் புகழ்ச்சியும் துச்சமெனகொள்
உன்னில் மகிழ்ச்சியும் தஞ்சமாகுமடா

வன்மமில்லா கன்மங்களோடு
திண்மமாய் வாழ்ந்திட்டால்
அஃதே வாழ்வியலின் உச்சமடா-உனக்கு
வானளாவிய புகழ்ச்சி நிச்சயமடா

கூச்சம் தவிர்த்து பயத்தை போக்கி
சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால் - வாழ்நாள்
போராட்டம் சிறிதேனும் குறையுமடா
மனம் விரைவில் நிறையுமடா

புத்தியை கிளரி சிந்தையுணர்ந்து
நிதானமாய் கவனித்து எண்ணங்களை
செயல்படுத்தினால் தரணியில்
நிரந்தரமாகும் உன் பவனியடா

இஃது ஆதியில் புகட்டிய வரிகளேயடா -ஆகையின்
அகமறிந்தோன் ஏட்டினையும் சிறிது பாரடா
இதுவே வாழ்வியலின் வித்தென நீயும் கூறடா

எண்ண எழுத்துகளுடன்
****பிரகாஷ்சோனா****

எழுதியவர் : பிரகாஷ்சோனா (31-May-12, 12:26 pm)
சேர்த்தது : prakash sona
பார்வை : 170

மேலே