ஏழ்மையின் இரகசியம்
கோடி ரூபாய் வீட்டை கட்டி கொடுத்தான்,
கோணி பைதான் அவனுக்கு, வீடாகி போனது - கட்டிட தொழிலாளிக்கு
தலைக்கு மேல்தான் வேலை, தரையில் அமர்ந்து தான் செய்ய வேண்டும் - சவர தொழிலாளிக்கு.
அரசாங்க உத்யோகம் தான் - ஆனால் அணிவதற்க்கு சட்டை கூட இல்லை - சாக்கடை தொழிலாளிக்கு.
நட்சத்திர உணவகம் தான்,
செய்கின்றபணியோ, எச்சில் இலை எடுப்பது,
எழையின் முதுகு, நாணலாய் வளைகிறது, முதலாளித்துவம, மூங்கிலாய் வளர்கிறது.
ஏழை வர்த்தகம் எங்கே செல்லும்.
சமத்துவச் செடியினை யார் வளர்ப்பது ?
முதலாளி வர்க்கத்தை யார் ஓழிப்பது ?
இவைகள் தொலைந்த பின்பு,
உழைப்பாளி வர்க்கத்தை,
ஒளிபெறச் செய்வோம்.