மழை
சில்லென்று வீசியது குளிர்க்காற்று !
சட்டென்று புருவத்தை உயர்த்தி,
மழையை எதிர்ப்பார்த்தன
விவசாயியின் மெலிந்த கண்கள் !
வாடியப் பயிர்களுக்காக !!!
அருகாமையில் வேண்டிக்கொண்டன,
சின்னஞ்சிறு சிறுமியின் அழகிய கண்கள்
மழை வேண்டாமென !
மதிய சத்துணவிற்காக !!!