நான் அனாதை அல்ல
உன்னை முதல் முதலாய் சந்தித்த நாளை
என்னால் மறக்க முடியாது ....
இப்போது நீ தொலைவில் இருந்தாலும் ,
எப்போதும் உனது நியாபகம் எனக்குள்ளே
ஓடிக்கொண்டே இருக்கிறது ....
சோகமாய் இருந்தேன் நீ வெளிநாடு சென்றதும் ....
அனாதை ஆனது போல பெரிய கவலை ....
எப்போது நீ என்னோடு பேசினாயோ,
அப்போது எனது சோகம் மறைந்தது ....
எனக்கு நீ இருக்கிறாய் என்ற ஆனந்தம் ...
மனதுக்குள் ஒரு பூரிப்பு .....
சீக்கிரம் உன்னை மீன்றும் காண்பேன்
என்ற ஒரே ஆனந்தத்தில் ....
நான் அனாதை அல்ல .... உனக்கு சொந்தக்காரி என்பதால்
வாழ்வேன் உனக்காக
நீ மீன்றும் அங்கிருந்து வரும் வரை ...
உனக்காய் வாழும் உனது வரும் கால மனைவி ....