சாதிக்கப் பிறந்தவன்!!!!
ஒ! இளைஞ்சனே
வீறுகொண்டு எழு.
வீழ்ச்சி என்பது
எழுச்சிக்கான கருவறை.
பாதாளத்தில் வீழ்ந்தாலும்
பகலவனின் உதயத்தைகாண
உறங்காமல் போராடு.
சூரியன் ஒருபோதும்
நாளை உதிக்கிறேன் என்று
சொல்வதில்லை.ஆனால் நாமோ
நாளை என்ற பெயரால்
நாழிகையை வீணடித்து
வீணாகி போகின்றோம்.
நீ அடைய போகும் இடத்தை தீர்மானி!
அதற்கான பாதை உன் இதய
உணர்வுகள் உருவாக்கட்டம்.
எந்த குழந்தையும்
மகிழ்ச்சியில் பிறப்பதில்லை .
வலியின் துடிப்பில் தான்
தாயின் கருவறையில் இருந்து
கனத்த குரலுடன் பிறக்கின்றன ..
அதுபோல், வேதனை மற்றும்
போராட்டத்தின் துடிப்பில் இருந்து தான்
சரித்திரம் உருவெடுகின்றது .
எந்த சாதனையும் மகிழ்ச்சில் பிறப்பதில்லை.
எந்த மனிதனும் எதையும்
சாதிக்கும் திராணிமிக்கவன்,
மனதில் தம்மால் முடியும் என்ற
ஒளி சுவாலை சுடர்விட்டெறியும் போது
வானம்கூட வாழ்க்கை பாதையாகிவிடுகின்றது புதுமையில் புரட்சியை தேடுபவனுக்கு
புல்லாங்குழலின் இசைக்கூட
தீமையை பொசுக்கும் தீசுடரை
கக்க ஆரம்பித்துவிடுகின்றது .
ஒ!மனிதா
உந்தன் உயரம் மீட்டரில் இல்லை
நீ பறக்க நினைத்தால் அது மில்லியனில் உள்ளது
நீ பதுங்க நினைத்தால்பாதத்தின் அடியில்உள்ளது .
இனியும் பாதை இல்லைஎன்று பதுங்காதே!
அது பாவத்தின் சிம்மாசனம் !
உழைக்க ஓயாதே !
உண்மையை சொல்ல தயங்காதே!
உறக்கத்தை உளியால் அடித்து துரத்து
நீ சாதிக்க பிறந்தவன்
ஒவொரு வினாடியும் உனக்காக பிறந்தது!
ஒவொரு இமைபொலுதும்
உன் சரித்தரதைப்பாட இசை அமைக்கட்டும்!
கங்கை நதிக்கூட
இமயத்தின் கண்ணீரில் தான் பிறக்கின்றது.
ஆம்! கண்ணீர் என்னும் நதியில் கூட
இலட்சியம் என்னும் படகைவிட்டு
முயற்சி என்னும் துடிப்பை எடுத்துப் பார்!
பிறகு தெரியும்
நீ பிரபஞ்சத்தின் எஜமான் என்று!
நீ உறக்கத்திலிருந்து விளிகின்றவரை
உதையமாகும் சூரியன் கூட
உன்னைப்பார்த்து சிரிப்பான்!
உறங்கும்போது கூட நீ விழித்திருந்தால்
விழித்திருக்கின்ற வெண்ணிலாக்கூட
வெட்கத்தால் ஓடிமறையும்!!!
ஆம்! நீதான் சூரியனென்று