தேடல்

காலம் கரையேறி செல்ல
வயதும் அதனுடன்
பயணம் செய்கின்றது.

மனதோ இழந்த நாட்களை
மீண்டும் பெற ஏங்குகிறது.
இதை உணர்ந்த மூளையோ
ஏளனம் செய்கிறது.

பள்ளி பருவத்தில் கள்ளம்
கபடமற்று துள்ளி திரிந்தோம்
எதிர் கால சிந்தனையின்றி.

கல்லூரி நாட்களில் நட்பு என்ற
மலரினுள் தேனீக்களாய் மூழ்கி
தேனின் சுவை அறிந்தோம்

படிக்கும் காலங்கள் கனவில்
வாழ்ந்த அதிசய உலகமாய்
இருந்தது.

படிக்கும் காலம் போனவுடன்
தேடலின் அத்தியாவசிய தேவையை
உணர்ந்தேன்.

கர்வம் கொண்டேன் படித்தவுடன்
வேலை கிடைக்கும் என்று,
எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிந்தது,
இருந்தும் தேடுகிறேன்.

ஏங்குகிறேன் என் மழலை
பருவம் திரும்ப.

இப்படிக்கு அதிர்ஷ்டமில்லாதவள்

எழுதியவர் : பிரியா நாகப்பன் (6-Jun-12, 11:58 am)
சேர்த்தது : priya nagappan
Tanglish : thedal
பார்வை : 234

மேலே