இந்தியா ஒளிர்கிறது
வளமையில் நிறைந்தாலும் வறுமையில் வாடுகிறது
பயிர்களுடன் பட்டினி சாவும் வளர்கிறது
அந்நியன் நிலவில் தடம் பதித்தான்
நம்மவர்கள் இன்னும் நிலாச்சோறு மட்டுமே உண்ணுகிறோம்
கிரிக்கெட் என்றால் நம் ஒற்றுமை 110 கோடி
தண்ணீர் என்றால் ஒற்றுமை போகுது ஓடி
எதிரி நாடுகளுக்கு நம் வீரர்கள் வைப்பதோ வேட்டு
நம் மக்களில் பாதி போடுவதில்லை வோட்டு
ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் முறையீடு
எய்ட்ஸ் க்கு நம் நாடோ பெரிய வீடு
அணு ஆயுத சோதனை என்றாலும் அடுத்த வேலை
சோறுக்கே அல்லல் எனும் அவலம்
நாகரீகத்தால் நசுக்கப்பட்டது நம் கலாச்சாரம்
நாடெங்கும் பெருகி வரும் தெருவோர விபச்சாரம்
முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்டது
ஆம் இந்தியா ஒளிர்கிறது
இந்தியன்